இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மூன்று பேர் தொற்றுக்குள்ளானது இன்று கண்டறியப்பட்டது.தற்போது வரையில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.120 நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட போதிலும், அவர்களில் 11 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.மேலும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.