மேலும் 3 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்..மொத்த எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு.!!

நாட்டில் இன்று (25.04.2020) மூன்று பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி இலங்கையில், இதுவரை மொத்தமாக 420 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 301 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 109 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது