இமயமலையில் திடீர் பனிச்சரிவு..உத்தராகன்டில் பேரழிவு..!! இதுவரை 32 பேர் பலி..!! மேலும் 200 பேரின் கதி..??

உத்தரகாண்ட் பணிச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ள நிலையில், தொடர்ந்து மீட்புப் பணி தீவிரமாக நடந்துவருகிறது.இமயமலையில் ஏற்படுத்த பனிச்சரிவால், இந்திய வடமாநிலமான உத்தரகாண்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரிஷிகங்கா ஆற்றுப்பகுதியில் உள்ள இயங்கிவரும் ஒரு நீர்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தபோவன் நீர்மின் நிலையம் முற்றிலுமாக சேதமடைந்தன.அங்கு பணியாற்றிவந்த 200க்கும் மேற்பட்ட ஊழியற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதில், கிட்டத்தட்ட 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.ஆனால், கடந்த மூன்று நாட்களில் 32 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 170க்கும் மேற்பட்டோர் காணவில்லை. அவர்களின் நிலை என்னவென்றும் தெரியவில்லை. இதனால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதற்கிடையில் தபோவன் பகுதியில், சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதை வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட குப்பைகள் மற்றும் மண்ணால் மூடியது. சுரங்கத்துக்குள் பணியாற்றிய 35 பேர் உள்ளேயே 3 நாட்களாக சிக்கியுள்ளனர்.அவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் இராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர்.கிரேன்கள் மூலம் சரங்கத்தில் ஏற்றப்பட்ட அடைப்பை சீர் செய்துவருகின்றனர்.மேலும், தெர்மல் கமெராக்கள் பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலம் அவர்கள் எந்தப் பகுதியில் சிக்கியுள்ளனர் என்பதை அறியும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.