இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரச நிர்வாக சேவையில் தமிழர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு..!! பெரும் ஏமாற்றத்தில் அரச நிர்வாக அதிகாரிகள்..!!

இலங்கை அரச நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்மொழி பேசும் எவரும் அதில் உள்ளீர்க்கப்படவில்லை. கடந்த ஆண்டுகளில் இந்த பரீட்சைகளில் தமிழ் மொழி பேசுவோரே அதிகளவில் தெரிவாகியிருந்த நிலையில், இந்த முறை எவரும் தெரிவாகாதது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை நிர்வாக சேவை தரம் 3 இல் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் 2019ஆம் ஆண்டு இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.இதில் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 68 பேர் தெரிவாகியுள்ளனர். அனைவருமே சிங்களவர்கள்தான். தமிழ் மொழி பேசும் எவரும் அதில் தெரிவானதாக அறிவிக்கப்படவில்லை.
2017 ஆம் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை தரம் 3 இற்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 61 பேரில் 1/4 பங்கிற்கு மேற்ப்பட்ட தமிழர்களும் அதில் முதலாவது இரண்டாவது தரத்தில் சித்தியடைந்தவர்களும், தமிழர்களாகவே இருந்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் பல தரப்பிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.