இது எப்படியிருக்கு..? கொரோனாவிற்கு மூல காரணம் சீனாவின் வூகான் மீன்சந்தை இல்லை..!! வெறும் வெளவால்களே.!! அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்டது WHO!

ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனம்(WHO) 10 பேர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை சீனாவின் வுகான் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது. 2.3 மில்லியன் மக்கள் சாவுக்கு காரணமாக இருக்கும் இந்த கொரோனாவின் பிறப்பிடமாக வுகான் உள்ளது அனைவரும் அறிந்த விடயம். கடந்த ஜனவரி 14 தொடக்கம் இன்றுவரை பல ஆராட்சிகளை மேற்கொண்ட அந்த 10 பேர் அடங்கிய நிபுணர் குழு, ஒரு அறிக்கையை சற்று முன்னர் சமர்ப்பித்துள்ளார்கள்.அதில், வுகான் மாநிலத்தில் உள்ள மீன் கடையில் அல்லது வைரஸ் ஆராட்சி நிலையத்தில் கொரொனா வைரஸ் பரவவில்லை என்றும், மாறாக ஏதாவது ஒரு கிராமத்தில் வெளவால் மூலமே மனிதர்களுக்கு தொற்றி இருக்க வேண்டும் என்று கூறி, உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் மீண்டும் சீனாவை காப்பாற்றி உள்ளார்கள். 2 வாரமாக தங்கி இருந்து 5 நட்சத்திர விடுதியில் சாப்பிட்டு ஏப்பம் விட்டு,சீன அதிகாரிகள் கொடுத்த சொகுசுக் காரில் சென்று இடங்களை பார்த்து விட்டு, தற்போது வெளவால் மீது பழியைப் போட்டுவிட்டார்கள். அவ்வளவு தான் .. வாய்பே இல்ல ராஜா…