இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் !! இன்று மட்டும் ஐந்து பேர் மரணம்..!!

நாட்டில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் விபரங்கள்,கபுலியந்த பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணொருவர், தெல்தெனிய வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். மொறட்டுவை பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஆண்ணொருவர், கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
கெட்டவல பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.குருநாகல் பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண்ணொருவர், நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 70 000 ஐ கடந்துள்ளது.இன்று செவ்வாய்கிழமை மாலை 6 மணி வரை 571 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 70 806 ஆக உயர்வடைந்துள்ளது.இவர்களில் 65, 053 பேர் குணமடைந்துள்ளதோடு, 5388 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று திங்கட்கிழமை 9 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 365 ஆக உயர்வடைந்துள்ளது.கொழும்பு 15 ஐ சேர்ந்த 95 வயதுடைய ஆணொருவர் கடந்த 5 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.கொவிட் நிமோனியா இவரது மரணத்திற்கான காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அநுராதபுரத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவர் கொவிட் நிமோனியா , இரத்தம் நஞ்சானமை, இதயம் செயழிலந்தமை என்பவற்றால் கடந்த 8 ஆம் திகதி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கொவிட் நிமோனியா நிலை காரணமாக கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.நீர்கொழும்பை சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சுவாச தொகுதி செயழிலந்தமை மற்றும் கொவிட் நிமோனியா நிலை காரணமாக கடந்த 7 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.கொழும்பு 12 ஐ சேர்ந்த 45 வயதுடைய பெண்னொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கொவிட் நிமோனியா மற்றும் புற்று நோய் என்பவற்றால் கடந்த 7 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.ஊர்காவற்றுரையை சேர்ந்த 76 வயதுடைய பெண்னொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் கொவிட் நிமோனியா , மற்றும் நுரையீரல் புற்று நோய் என்பவற்றால் கடந்த 7 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.ஹொரண பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய ஆணொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி இரத்தம் நஞ்சானமை, கொவிட் நிமோனியா மற்றும் நுரையீரல் புற்று நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.குருந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கொவிட் நிமோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமை என்பவற்றால், கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளார்.மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் இதய நோயால் உயிரிழந்துள்ளார்.