பொத்துவில்- பொலிகண்டிப் பேரணி.. சித்தார்த்தன், சாணக்கியன், மணிவண்ணன் மீது பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், இரா.சாணக்கியன், யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி பேரணியாக பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நுழைந்தமைக்காக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிசார் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிதிமன்ற உத்தரவை மீறியதாக பல அரசியல் பிரமுகர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.அவர்களின் பெயர் விபரங்கள் சற்று நேரத்தில் வெளியாகும்.