இலங்கையில் கொரோனாவிற்குப் பலியான முதலாவது பொலிஸ் உத்தியோகஸ்தர்..!! தென்னிலங்கையில் தொடரும் சோகம்..

ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தில் முதலாவது கொவிட் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி மொனராகலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 59 வயதான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே உயிரிழந்தவராவார்.குறித்த பொலிஸ் பரிசோதகர் கடந்த 3 ம் திகதி இருதய நோயால் அவதிப்பட்ட நிலையில், மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.