மர்மமான முறையில் காணாமல் போன வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்.! தீவிர தேடுதலில் பொலிஸார்..!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரான இலங்கநாதன் செந்தூரன் காணாமல் போகியுள்ளமை குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தொண்டமானாறு மயானத்திற்கு அருகில் அவருடைய மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, தொலைபேசி என சில பொருட்களை வல்வெட்டித்துறை பொலிஸார்  இரவு மீட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தொண்டமனாறு, மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மித்த கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு  7.20 மணியளவில் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்கு பொலிஸார் சென்றனர்.இதன்போது, அந்த இடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.