ராவல்பின்டி டெஸ்ட்..தனது அற்புதமான ஆட்டத்தினால் தென்னாபிரிக்காவை வையிட் வோஷ் செய்து அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்..!!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 95 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 272 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில், அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாஹீம் அஷ்ரப் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும் பாபர் அசாம் 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், நோட்ஜே 5 விக்கெட்டுகளையும் மஹாராஜ் 3 விக்கெட்டுகளையும் முல்டர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பவுமா ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் மல்டர் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஹசன் அலி 5 விக்கெட்டுகளையும் ஷாயின் ஷா அப்ரிடி, நவுமான் அலி மற்றும் பஹூம் அஷ்ரப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 71 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், தென்னாபிரிக்கா அணிக்கு 370 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன்போது, அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 115 ஓட்டங்களையும் நவுமன் அலி 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், ஜோர்ஜ் லிண்டே 5 விக்கெட்டுகளையும் மஹாராஜ் 3 விக்கெட்டுகளையும் ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இதனைத்தொடர்ந்து 370 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 274 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால், பாகிஸ்தான் அணி 95 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.இதன்போது, அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்டன் மார்கிரம் 108 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இதில், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஹசன் அலி 5 விக்கெட்டுகளையும் ஷாயின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் யாசிர் ஷா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.