இலங்கையின் மருத்துவ வரலாற்றில் புதிய புரட்சி..யாழில் நடந்த 12 மணி நேர விசேட சத்திரசிகிச்சை..!! ஆணைப் பெண்ணாக மாற்றி சாதனை படைத்த மருத்துவர்கள்!!

இலங்கையில் முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஆண் ஒருவர் பெண்ணாக மாறிய அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது.மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 இளைஞன் பெண்ணாக அறுவைச் சிகிச்சை மூலம் மாறியுள்ளார். சத்திரசிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் 12 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் ஆண் ஒருவரை பெண்ணாக மாறி வெற்றிகரமாக இந்த சத்திரசிகிச்சையை மேற் கொண்டுள்ளார்.சத்திர சிகிச்சைக்குள்ளான குறித்த நபர் தனது கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.