பாதுகாப்பிற்காக வந்த மகள் முறையான சிறுமியை வீட்டில் வைத்து வேட்டையாடிய சித்தப்பா..!! சித்தி வழங்கிய முறைப்பாட்டில் அதிரடியாகக் கைது..!!

யாழ்.ஆனைக்கோட்டைப் பகுதியில் சித்தி வீட்டில் பாதுகாப்பிற்காக விடப்பட்டிருந்த 13 வயதான சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிறுமியின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் சித்தி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்திருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.சிறுமியின் பெற்றோர் முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் நிலையில் சிறுமியின் கல்விக்காக சித்தி வீட்டில் பாதுகாப்பிற்காக விடப்பட்டிருந்த நிலையில், நேற்றய தினம் இரவு, சிறுமி மீது தனது கணவர் வன்புணர்வு புரிந்ததாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தவும், சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.