அனைத்து இலங்கை மக்களுக்கும் ஓர் மிக முக்கிய செய்தி..மார்ச் 1ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் ஆரம்பம்!!

இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. ஆரம்ப சுகாதார நலன்துறை ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே இதனைத் தெரிவித்துள்ளார்.இதற்கென 4 ஆயிரம் நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.இதன்படி 2000 நிலையங்களில் நாளாந்தம் தலா ஒரு நிலையத்தில் 300 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர் பெரியளவில் ஏனைய உபாதைகள் குறித்து தகவல்கள் இல்லை.எனினும் தடுப்பூசியின் தாக்கத்தின் போது உடலில் உபாதைகள் ஏற்படலாம் என்றும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.