நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கிச் சரிந்த இளம் குடும்பஸ்தர் மரணம்..!! யாழ்.வடமராட்சியில் சோகம்..

யாழ்ப்பாணம் அல்வாயில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி அல்வாய் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மருதங்கேணி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் குறித்த குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ஒரு பிள்ளையின் தந்தையான சுந்தரலிங்கம் நிருத்திகன் [வயது 33 ] என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.மருதங்கேணி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இவர் நள்ளிரவு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.இந்நிலையில், இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது