தென்கிழக்காசியாவையும் உருட்டியெடுக்கும் கொரோனா…அதிக தொற்றுக்குள்ளான நாடானது சிங்கப்பூர்! ! இன்று மட்டும் 897 பேர் பாதிப்பு..!!

சிங்கப்பூரில் இன்று (24) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 897 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12,075 ஆக உயர்ந்துள்ளது. புதிய சம்பவங்களில் 13 சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.நேற்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் வைரஸ் தொற்று எண்ணிக்கை 11,000ஐ தாண்டிய நிலையில் தென்கிழக்காசிய நாடுகளிலேயே அதிக கொரோனா தொற்று பதிவான நாடானது சிங்கப்பூர்.சிங்கப்பூரில் நேற்று தொற்றுக்குள்ளான 1,037 பேரில் 982 பேர் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள். 25 பேர் உள்ளூர் நபர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.