தணியாத கல்வித் தாகம்..அயராத முயற்சியினால் தனது 93வது வயதில் பாளி மொழிப் பரீட்சைக்குத் தோற்றி அசத்திய மூதாட்டி!! இலங்கையில் இப்படியும் ஒரு பெண்மணியா..?

93 வயதான மூதாட்டியொருவர் கண்டியில் நடந்த தஞ்சரிபிடக தம்மம் மற்றும் பாளி மொழி பரீட்சையில் தோற்றியுள்ளார்.கண்டி சேனநாயக்க கல்லூரியில் கடந்த 6,7ஆம் திகதிகளில் இந்தப் பரீட்சைகள் இடம்பெற்றன. 1928 இல் பிறந்த விதானகே லீலாவதி அஸ்லின் தர்மரத்ன, கிடைத்துள்ள வாழ்க்கையை அர்த்தமுள்ள விதத்தில் வாழ்வதே தனது குறிக்கோள் என்றும், குறிப்பாக பெண்கள் முன்வந்து வாழ்க்கையை பலத்துடன் எதிர்கொள்ள தயங்கக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, களனி பல்கலைக்கழகத்தில் முதுகலை தேர்வு எழுத தகுதியுடையவர் என்றும், இறப்பதற்கு முன் தேர்வில் தேர்ச்சி பெறுவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார்.பரீட்சை மண்டபம் மாடி வகுப்பறையில் இருந்தது. எனினும், மூதாட்டி மாடிப்படியேற முடியாததால், அவருக்கு கீழே பிரத்தியேக இடம் தயார் செய்யப்பட்டிருந்தது.