இலங்கையில் இன்று மட்டும் நான்கு பெண்கள் உட்பட ஐவர் கொரோனாவிற்குப் பலி..!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.இதற்கமைய, கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், வக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், வெலிமட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் தும்மலசூரிய பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.