மத்திய கிழக்கையும் உலுப்பத் தொங்கும் கொடிய கொரோனா…கட்டாரில் ஒரேநாளில் 761பேருக்குத் தொற்று!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கட்டாரில், ஒரேநாளில் 761பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவியுள்ளது.உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து, கட்டாரில் மிகப்பெரிய தினசரி அதிகரிப்பு இதுவென சுகாதார அமைச்சகம் விபரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 8,525பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,706பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 10பேர் உயிரிழந்துள்ளனர். 72பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 809பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.