வேகமாகப் பரவும் கொரோனா..!இலங்கையில் ஒரேநாளில் அதிக தொற்று..!!

இன்று இலங்கையில் 47 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 35 பேர் கடற்படைச் சிப்பாய்களாவர். வெலிசறை கடற்படை தளத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 30 சிப்பாய்கள் தொற்றிற்குள்ளானது தெரியவந்தது. இதுதவிர, தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 11 பேர் இன்றுடன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.இதேவேளை, வெலிசறை கடற்படை தளத்தில் இருந்து விடுமுறையில் சென்ற கடற்படை சிப்பாய்கள் 5 பேர் இன்று கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் அடையாளம் காணப்பட்டனர்.அவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொற்று உறுதியானது. அவர்கள் இரத்தினபுரி, கண்டி, பதுளை, குருணாகல் பகுதிகளை சேர்ந்தவர்கள்.இறுதியாக மருதானையை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இன்று மாலை அவரது குழந்தை உயிரிழந்துள்ளது.