இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 400ஐயும் கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வடைந்துள்ளது.இந்த விடயத்தை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்றைய தினம் இதுவரையில் 46 பேருக்கு கொரோனா நோய் தொற்று தாக்கியமை உறுதியாகியுள்ளது.நேற்றைய தினம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 368 ஆக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.