பல்வேறு தடைகளையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுடன் சற்று முன் யாழ். மாவட்டத்திற்குள் நுழைந்தது பொலிகண்டிப் பேரணி.!! (நேரலை)

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை வந்தடைந்தது.

பேரணியை முகமாலையில் வரவேற்று பெரும் திரளான மக்கள் இணைந்து கொண்டனர்.வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் கடந்த 3ஆம் திகதி புதன்கிழமை அம்பாறை பொத்துவிலில் ஆரம்பமாகி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்கள் சென்று நேற்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது.

கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி பரந்தன், பளை, முகமாலையை சற்றுமுன் வந்தடைந்தடைந்தது.இப்பேரணி கொடிகாமம், சாவகச்சேரி,கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ்ப்பாணம் மாநகரம், யாழ்ப்பாணம் பொதுநூலகம்,யாழ்ப்பாணம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ். பல்கலைக்கழகம், நல்லூர் தியாகதீபம் நினைவிடம், கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி, வல்லைவெளி, புறாபொறுக்கி சந்தி, கரணவாய், நெல்லியடி, மாலுசந்தி, மந்திகை, பருத்தித்துறை, திக்கம், அல்வாய், வதிரிச்சந்தி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை தீருவில் வெளி, வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக பொலிகண்டி சென்று நிறைவடையும்.