அனைத்து மின் பாவனையாளர்களுக்கும் மின்சார சபை விடுக்கும் முக்கிய வேண்டுகோள்..!!

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தாவிட்டால் மின் நுகர்வு அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய மின் நுகர்வு 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என்று மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சு அறிவித்துள்ளது.அதனால், பாவனையாளர்கள் அனைவரும் மின்சாரம் வீணாவதைத் தடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.தற்போது தேசிய மின் தேவையில் சுமார் 15 சதவீதம் நீர் மின் உற்பத்தியால் வழங்கப்படுகிறது.எவ்வாறாயினும், முக்கிய விவசாய நோக்கங்களுக்காகத் தேவையான நீரை விடுவிப்பதன் காரணமாக நீர்மின் உற்பத்தி ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.