தற்போது கிடைத்த செய்தி..இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயிலில் பாரிய தீ விபத்து..!!

கொழும்பு வத்தளை – ஹேக்கித்தை ஸ்ரீ சுப்ரமணியம் கோவிலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்று சனிக்கிழமை முற்பகல் முதல் ஏற்பட்டுள்ள இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன் தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.