பழைய பண்ணை வீட்டை வாங்கியவருக்கு கோடிக்கணக்கான தங்கம், வைரம் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்பவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் மறைந்த பியானோ இசை ஆசிரியர் பெட்-ஜோன் ரேக்கின் என்பவரது பழங்கால பண்ணை வீட்டை, சமீபத்தில் 7 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.இதனை அடுத்து அந்த வீட்டை சுத்தம் செய்யும் பணியை அலெக்ஸ் ஆர்ச்போல்டு மேற்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது.அந்த வீட்டின் ஒரு இடத்தில் பழங்கால தங்க வைர மோதிரங்கள் இருந்துள்ளன. இதைப் பார்த்து சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் அலெக்ஸ் நின்றுள்ளார். அவற்றை எடுத்தபோது அதன் அருகிலேயே விலையுயர்ந்த துணிமணிகள் இருந்துள்ளன.இதனைத் தொடர்ந்து மற்றொரு அறையில் பழங்கால நாணயங்கள் இருந்துள்ளன. இவற்றின் மதிப்பு தோராயமாக 2 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். 7 லட்சம் கொடுத்து பழைய வீட்டை வாங்கிய நபருக்கு கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தெரிவித்த அலெக்ஸ் ஆர்ச்போல்ட், ‘இந்த பியானோ டீச்சரை சில வருடங்களாக தெரியும்.ஆனால், அவர் வீட்டுக்குள் இவ்வளவு பொருட்கள் இருக்கும் என நினைக்கவில்லை. நான் சந்தித்த பியானோ டீச்சர் உண்மையில் கோடீஸ்வரர் என எனக்கு தெரியாது’ என அவர் தெரிவித்துள்ளார்.