சுன்னாகத்தில் கோர விபத்து..மோட்டார் சைக்கிள் பயணியின் ஒரு கை சிதைந்தது!! தப்பியோடிய டிப்பர் சாரதிக்கு நேர்ந்த கதி!!

யாழ் சுன்னாகம் நகரில் இன்று மாலை கோர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் சந்தியில் பரபரப்பான மாலைவேளை தனது அலட்சியமான ஓட்டத்தினால் மோட்டார் சைக்கிளொன்றை விபத்துக்குள்ளாக்கிய டிப்பர் சாரதி தப்பியோடியுள்ளார்.மோட்டார் சைக்கிளில்
பயணித்தவர் கீழே விழுந்தபொழுது டிப்பரின் பின் சில்லில் அகப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவரின் கை சிதைவடைந்துள்ளது.இந்த விபத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், தப்பியோடிய டிப்பர் சாரதியைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் மருதனார்மடத்தில் வைத்து அவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் கொண்டுவந்து ஒப்படைத்தனர்.அவசர முதலுதவி இலக்கமான 1990க்கு பலரும் பல தடவை அழைப்பை ஏற்படுத்தியும், உரிய நேரத்தில் ‘அம்புலன்ஸ்’ வருகை தராதமையினால் முச்சக்கர வண்டியில் காயமடைந்தவரை மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.