நாட்டு மக்களுக்கு மிக நல்ல செய்தி..அதிரடியாகக் குறைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விபரங்கள்..!!

எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் 27 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தக் கட்டுப்பாட்டு விலைகள் எதிர்வரும் 3 மாத காலத்தில் செலுப்படியாகும் என அவர் கூறியுள்ளார்.சதொச, கூட்டுறவு நிலையங்களில் இந்த பொருட்களை கட்டுப்பாட்டு விலையின் கீழ் கொள்வனவு செய்ய முடியும் என அவர் அறிவித்துள்ளார்.கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள்:

01.சிவப்பு பச்சை அரிசி 1 கிலோகிராம் – 93 ரூபா

02.வெள்ளை பச்சை அரிசி 1 கிலோகிராம் – 93 ரூபா

03.வெள்ளை நாடு 1 கிலோகிராம் – 96 ரூபா

04.சம்பா 1 கிலோகிராம் (புதிய விலை) 99 ரூபா

05.கீரி சம்பா 1 கிலோகிராம் (புதிய விலை) 125 ரூபா

06.கோதுமை மா 1 கிலோகிராம் (புதிய விலை) 84 ரூபா

07.வெள்ளை சீனி 1 கிலோகிராம் (புதிய விலை) 84 ரூபா

08.சிவப்பு சீனி 1 கிலோகிராம் (புதிய விலை) 99 ரூபா

09.தேயிலை தூள் (100கிராம்) (புதிய விலை) 95 ரூபா

10.சிவப்பு பருப்பு (அவுஸ்திரேலியா) 1 கிலோகிராம் 165 ரூபா

11.பெரிய வெங்காயம் (இந்தியா) 1 கிலோகிராம் 120 ரூபா

12.உள்நாட்டு உருளைகிழங்கு 1 கிலோகிராம் 180 ரூபா

13.பாகிஸ்தான் உருளைகிழங்கு 1 கிலோகிராம் 140 ரூபா

14.கடலை ஒரு கிலோகிராம் 175 ரூபா

15.காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் 495 ரூபா

16.உள்நாட்டு ரின் மீன் 425 கிராம் 220 ரூபா

17.இறக்குமதி செய்யப்படும் ரின் மீன் 425 கிராம் 265 ரூபா

18.நெத்தலி மீன் 1 கிலோகிராம் 545 ரூபா

19.தோலுடனான கோழி இறைச்சி 400 ரூபா

20.கட்டி உப்பு 1 கிலோகிராம் 43 ரூபா

21.பால் மா 400கிராம் 355 ரூபா

22.சோயா எண்ணெய் 500 மில்லிலீற்றர் 310 ரூபா

23.ஆடைகளை கழுவும் சவற்காரம் (பீசீசீ) 115கிராம் 43 ரூபா

24.ஆடைகளை கழுவும் சவற்காரம் 650 கிராம் 260 ரூபா

25.வாசனை சவற்காரம் 100கிராம் ஆடைகளை கழுவும் சவற்காரம் (பீசீசீ) 115கிராம் 56 ரூபா

26.கைகளை கழுவும் திரவம் 100 மில்லிலீற்றர் ஆடைகளை கழுவும் சவற்காரம் (பீசீசீ) 115கிராம் 250 ரூபா

27.முகக்கவசம் (எஸ்.எல்.எல் தரச்சான்றிதழ்) ஆடைகளை கழுவும் சவற்காரம் (பீசீசீ) 115கிராம் 14 ரூபா