மருமகனின் கோரத் தாக்குதலில் மாமியார் பலி.!! மனைவியும் மற்றொருவரும் வைத்தியசாலையில்..!

தம்புள்ளை – பெல்வெர பகுதியில் மதுபோதையில் இருந்த மருமகனால் தாக்கப்பட்ட வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் மகளும், இன்னுமொரு நபரும் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வெர பகுதியில் வீடொன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்த நபர் அவரது மனைவி மற்றும் மனைவியின் தாயாருடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.இதன் போது மோதல்கள் ஏற்படுள்ளதுடன் மது போதையில் இருந்த நபர் அவரது மனைவி மற்றும் மாமியை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதுடன் இவர்களை சமாதானப் படுத்தும் நோக்கில் வந்த அயலவர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.இதன்போது படுகாயமடைந்த மூவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 61 வயதுடைய சந்தேக நபரின் மாமி உயிரிழந்துள்ளார். அவரது மனைவியும் மற்றைய நபரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.