கோடீஸ்வர வர்த்தகர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கனடா சென்ற நிலையில் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த திருடன் 15 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளார்.
திருடிய பொருட்களை விற்று அதில் போதைப்பொருள் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீண்டும் பணம் இல்லாமல் போனவுடன் போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக மீண்டும் குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு சென்று பூச்சாடியையும் மலசலகூடத்திற்குள் இருந்த பொருட்களையும் விற்பனை செய்ததாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.