வீட்டு தோட்டதில் அதிக பயன்பெற இந்த மாதத்தில் இந்த பயிர் நடுங்கள்!

வீட்டுக் காய்கறித் தோட்டமானது, வீட்டின் பின்புறத்தில் வீணாகும் நீரைக் கொண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்தல் இது வீட்டுத் தோட்டம், ஊட்டச்சத்து தோட்டம், வீட்டுக் காய்கறித் தோட்டம், காய்கறித் தோட்டம் என அழைக்கப்படுகிறது.

வீட்டுக் காய்கறித் தோட்டத்தின் பயன்கள்: அதிக ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும். நச்சு மருந்துகள் இல்லாத பழம் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்தல் காய்கறிகள் வாங்குவதற்காக ஆகும் செலவைக் குறைக்க முடிகின்றது வீட்டுக் காய்கறித் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளானது கடைகளில் வாங்குவதைக் காட்டிலும் சுவையாக இருக்கும். சமையலறையில் வீணாகும் நீர் மற்றும் பொருட்களை உபயோகமாக பயன்படுத்த முடிகின்றது.
உடலிற்கும் மனதிற்கும் உடற்பயிற்சியாகும்.

இடத் தேர்வு : அதிக சூரிய ஒளி கிடைக்கும் வெட்ட வெளிப் பகுதி மற்றும் நீர் ஆதாரமுள்ள பகுதி, வீட்டுக் காய்கறித் தோட்டத்தின் அளவு மற்றும் வடிவமானது நிலத்தின் அளவு, வீட்டிலுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் தோட்டத்தை சீராக பராமரிக்க ஆகும் கால அளவைப் பொறுத்தது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு, 5 சென்ட் (200 மீ2) இடமானது ஆண்டு முழுவதும் காய்கறிகள் கொடுக்க போதுமானது. செவ்வக வடிவ தோட்ட அமைவானது சதுர வடிவ (அ) நீள் பட்டை வடிவ தோட்டத்தை காட்டிலும் சிறந்ததாகும்.

அந்த வகையில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?
ஜனவரி: (மார்கழி – தை)
1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள்.
பிப்ரவரி: (தை – மாசி) 1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல், 5) வெண்டை, 6)சுரை, 7) கொத்தவரை, 8)பீர்க்கன், 9) கீரைகள், 10)கோவைக்காய்.
மார்ச்: (மாசி – பங்குனி)
1)வெண்டை, 2)பாகல், 3)தக்காளி, 4)கோவை, 5)கொத்தவரை, 6)பீர்க்கன்.

ஏப்ரல் : (பங்குனி – சித்திரை) 1)கொத்தவரை, 2) வெண்டை.
மே: (சித்திரை – வைகாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கொத்தவரை.

ஜூன் : (வைகாசி – ஆனி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கோவை, 4)பூசணி,5) கீரைகள், 6)வெண்டை.7) செடி முருங்கை
ஜூலை: (ஆனி -ஆடி)
1) மிளகாய், 2)பாகல், 3)சுரை, 4)பூசணி,5) பீர்க்கன், 6)முள்ளங்கி, 7)வெண்டை, 8)கொத்தவரை, 9)தக்காளி.
ஆகஸ்ட்: (ஆடி – ஆவணி)
1) முள்ளங்கி, 2)பீர்க்கன், 3)பாகல், 4) மிளகாய், 5)வெண்டை, 6)சுரை..
செப்டம்பர்: (ஆவணி – புரட்டாசி)
1) கத்தரி, 2)முள்ளங்கி, 3)கீரை, 4)பீர்க்கன், 5)பூசணி.

அக்டோபர்: (புரட்டாசி – ஐப்பசி)
1)கத்தரி, 2)முள்ளங்கி.
நவம்பர் : (ஐப்பசி – கார்த்திகை)
1)செடிமுருங்கை, 2)கத்தரி, 3)தக்காளி, 4)முள்ளங்கி, 5)பூசணி.
டிசம்பர் : (கார்த்திகை – மார்கழி)
1)கத்தரி, 2)தக்காளி.