கொரோனா நோயாளிகளுக்காக தனது வைத்தியசாலையை முழுமையாக அர்ப்பணித்த மருத்துவர் நெவில் பெர்னாண்டோவையும் காவு கொண்டது கொரோனா..!!

மருத்துவர் நெவில் பெர்னாண்டோ கோவிட் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நெவில் பெர்னாண்டோ சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.கோவிட் தொற்றுக்கு இலக்காகி மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மரணிக்கும் போது அவருக்கு 89 வயது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், நெவில் பெர்னாண்டோ மாலபேயில் காணப்படும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஸ்தாபகர் ஆவார்.