வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..வடக்கில் இழுத்து மூடப்பட்ட தனியார் வங்கி..!!

வங்கி ஊழியர் ஒருவர் உட்பட வடக்கில் 5 பேருக்கு கொரோனா கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த வங்கி மறு அறிவித்தலவரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் நேற்று நடத்தப்பட்ட 667 பேருக்கான PCR பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் மன்னார் சம்பத் வங்கியில் பணியாற்றும் மாத்தறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.மாத்தறையைச் சேர்ந்த குறித்த வங்கி உத்தியோகத்தர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து, அவருக்கு உடனடியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் நேற்று மீளவும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.இந்த நிலையில், சம்பத் வங்கியின் மன்னார் கிளை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.அத்துடன் முல்லைத்தீவில், மாத்தளையில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு கோரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில்ஆடைத் தொழிற்சாலை சாரதி ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் தொற்றாளர் ஒருவருடன் நேரத் தொடர்புடையவர்.யாழ்ப்பாணம் வருகை தருவோருக்கு எழுதுமட்டுவாழ் வைத்து தடையில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.