திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்த 12 வயது பாடசாலை மாணவி..!! தென்னிலங்கையில் பரபரப்பு..!

புத்தள பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமடைந்தமையினால் உயிரிழந்துள்ளார். புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி அங்கிருந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மலீஷா என்ற 12 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பகல் உணவு பெற்ற பின்னர் மயக்கம் வருவதனை போன்று உள்ளதாக குறித்த மாணவி தனது சக மாணவர்களிடம் கூறியுள்ளார். இது தொடர்பில் முதலுதவிகளை வழங்கிய ஆசிரியர்கள் மாணவி வழங்கிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றோருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.1990 என்ற அம்பியுலன்ஸ் சேவைக்கு பலமுறை அழைப்பை ஏற்படுத்திய போதிலும் அது தாமதமாகியுள்ளது. இதன் காரணமாக மாணவியின் தாயார் மாணவியை முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கு, அங்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.அதன் பின்னர் அங்கிருந்து மொனராகலை வைத்தியசாலைக்கு குறித்த சிறுமி மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். எனினும், அங்கு சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. PCR முடிவுகளுக்காக காத்திருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.