பிரித்தானிய மக்களுக்கு பெருநிம்மதி தரும் செய்தி..லண்டனில் சடுதியாக குறைய ஆரம்பித்த கொரோனா தொற்று..!!

பிரித்தானியா முழுவதுமாக சடுதியாக கொரோனா தொற்று எண்ணிக்கை பெரும் அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று சுகாதார சேவை திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. தொடர்ந்து 5வது நாளாக,பெரும் எண்ணிக்கையில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ளது. இதற்கு தடுப்பூசிகளே காரணம் என்று கூறப்படுகிறது. பிரித்தானியா திட்டமிட்ட வகையில், எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.இதன் காரணத்தால், பல இடங்களில் கொரோனா மேலும் தொற்றாமல் தடுக்கப்பட்டுள்ளது.24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று வெறும் 19,000 ஆயிரம் பேருக்கே ஏற்பட்டுள்ளது என்றும். சாவு எண்ணிக்கை 1,300 என்றும் மேலும் அறியப்படுகிறது.