சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் மேல்மாகாணத்தில் சிக்கியிருக்கும் லட்சக்கணக்கானோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி…!!

தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சொந்த பிரதேசங்கள் நோக்கி செல்ல அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இவர்களில் 40 ஆயிரம் பேர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தங்கியுள்ளனர்.ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரையிலான நாட்கள் அவர்கள் அங்கு தங்கியிருக்க நேரிட்டமை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த நபர்கள் வெளி மாகாணங்களுக்கு செல்வதற்கு விசேட அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.