மத்திய கிழக்கு இஸ்லாமிய தேசமொன்றில் மிகப் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்படும் இந்து ஆலயம்..!!

ஐக்கிய அரசு அமீரகத்தின் டுபாயில் நகரில் ரூ.149 கோடி செலவில் கண்கவரும் வகையில் ஹிந்து கோயில் கட்டப்பட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு (2022) அக்டோபரில் தீபாவளி பண்டிகையின் போது இந்த கோயில் பக்தா்களுக்காக திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சுமாா் ரூ.149 கோடியில் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்தக் கோயில் கட்டப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிகவும் பழைமையான கோயில்களில் ஒன்றான, 1950 களில் கட்டப்பட்ட சிந்தி குரு தா்பாருக்கு அருகே இந்தப் புதிய கோயில் அமைகிறது.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது அஸ்திவாரப் பணிகள் முடிவடைந்துள்ளன. 2022 அக்டோபருக்குள் பணிகள் முடிந்து, தீபாவளிப் பண்டிகையின்போது புதிய கோயில் திறக்கப்படவுள்ளது. 11 ஹிந்து கடவுள்களின் சிலைகள் கோயிலில் நிறுவப்படவுள்ளன.அரேபிய பாணியில் கோயில் கட்டுமானம் செய்யப்படவுள்ளது. இந்தக் கோயில் கட்டுவதற்கு ஹிந்துகள் மட்டுமின்றி அரபு நாட்டவா்களும் நிதியளித்துள்ளனா்.இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதியில் கிறிஸ்தவ தேவாலயங்களும் அமைந்துள்ளன. எனவே, டுபாயில் பல்வேறு மதத்தினரும் சங்கமிக்கும் இடமாகவும் அப்பகுதி அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.