காரைதீவை வந்தடைந்த மக்கள் பேரணி..பெருமளவில் கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு..!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் காரைதீவினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த பேரணியை தடுக்க பொலிஸாரும், இராணுவத்தினரும் பல தடைகளை மேற்கொண்டு வருவதுடன்,காரைத்தீவு பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆரம்பமாகி, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஆகியோரின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெற்று வருவதுடன், இந்த தொடர் போராட்டத்திற்கு சகல தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர். இப்போராட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளதுடன், பெருமளவான பொது மக்களும் இணைந்துள்ளனர்.