நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி!!

நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 767 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் கடந்த 29ம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் 23 ஆயிரத்து 217 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.