கொரோனாவின் தாக்கத்தினால் கொழும்பில் தெளிவாகத் தெரியும் சிவனொளிபாதமலை…!!

கொழும்பில் சில பிரதேசங்களில் இருந்து தற்போது சிவனொளிபாத மலையை காணக் கூடியதாக இருப்பதுடன் அந்த காட்சியை பலர் புகைப்படமாகப் பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக பல தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்பதுடன் வாகன போக்குவரத்து குறைந்துள்ளதுடன் சுற்றாடல் மாசடைவதும் குறைந்துள்ளது.இதனால், காற்றில் தூசி குறைந்து காற்றின் தரம் அதிகரித்துள்ளது.தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. காற்றில் மாசு குறைந்துள்ளதால், சிவனொளிபாத மலையை கொழும்பில் இருந்து காண முடிந்துள்ளதாக பலர் கூறியுள்ளனர். கொழும்பில் பல பிரதேசங்களில் இருந்து அதிகாலை நேரத்தில் சிவனொளி பாத மலையை காணக் கூடியதாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

12 ராசிக்காரர்களுக்கும் முக்கியமான செய்தி…

நீங்களும் இந்தக் காணொளியை பாருங்கள்…!