பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு அரும்பாடுபட்ட முக்கியஸ்தர் தூக்கிலிட்டுத் தற்கொலை..!!

சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மிகப்பெரிய செயற்பாடுகளை மேற்கொண்ட சமூக வலைத்தள செயற்பாட்டாளர் தற்கொலை செய்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மதுஷ் பிரபாத் லியனகே எனப்படும் கனிஷ்க துஷ்மந்த என்பவரே நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உயிரிழந்தவர் அம்பலங்கொடை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.அரசியல் பிரச்சார நடவடிக்கை பலவற்றை மேற்கொண்டமை தொடர்பில் வரவேண்டிய பணம் கிடைக்காமை மற்றும் அதிக கடன் காரணமாக அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.மதுஷ் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில், மற்றுமொரு பிரபல சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத், பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.