பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தை தடுத்து நிறுத்த பொலிசார் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.எனினும், பெருமளவு மக்களும், அரசியல் பிரமுகர்களும் பொத்துவில் நகரில் குவிந்து வருகிறார்கள்.
தற்போது அந்தப் பகுதியில் அடை மழை பொழிந்து வருவதால், பேரணியை ஆரம்பிப்பதில் தாமதம் நிலவுகிறது.போராட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களை வழிமறித்து, பலருக்கு நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.