இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஐவர் இன்று வைத்தியசாலையில்!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை அடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையினால் ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை பொது வைத்தியசாலையில் இன்று கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையிலேயே, சிகிச்சைக்காக அவர்கள் அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.குறித்த வைத்தியசாலையில் பணிபுரிகின்ற சுகாதார ஊழியர்களே இவ்வாறு ஒவ்வாமைக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.