மிக விரைவில் நாய்கள் உட்பட செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை..!!

இலங்கையில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் நாய் போன்ற செல்லப் பிராணிகளுக்கு அந்த வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை அறிய பரிசோதனைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்களின் சங்கத்தின் தலைவர் ஹேமாலி கொத்தலாாவல தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவியதாக உலகில் எந்த நாடும் இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், மனிதர்களிடம் இருந்து இந்த வைரஸ் விலங்ககளுக்கு பரவுவதாக ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் விலங்கியல் சுகாதார பிரிவு, கால் நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் என்பன இணைந்து இது குறித்து பரிசோதனைகளை நடத்த உள்ளதாக அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.