யாழ் மந்திரிமனைக்குள் புகுந்துள்ள பாரிய மலைப்பாம்பு.!! கடும் சீற்றத்தில் பொதுமக்கள்..!!

யாழ்ப்பான அரசர்கால மந்திரிமனையில் மலைப்பாம்பு நிற்பதைப்போன்ற படம் ஒன்று பலரையும் கவர்ந்துள்ளதுடன், இணையத்திலும் வைரலாகியுள்ளது. மலைப்பாம்பு இனங்கள் இல்லை எனக் கருதப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த பாம்பு எப்படி வந்திருக்கும் என பலரும் குழம்பியுள்ள நிலையில் குறித்த பாம்பு அங்கு எப்படி வந்தது என ஏனைய படங்கள் காட்டுகின்றன.தென்னிலங்கையிலிருந்து வந்த குறளிவித்தைக்காரர் ஒருவர் தன்னுடன் கொண்டுவந்த இரு குரங்குகளையும், குறித்த பாம்பையும் அங்கு காட்சிப்படுத்தியுள்ளமையே இதற்கான காரணம் என அறியப்படுகின்றது.எவ்வாறாயினும் யாழ்ப்பாண குடாநாட்டின் இராசதானி அமைந்த காலத்திலிருந்தே இருக்கும் குறித்த மந்திரிமலை தேடுவாரற்று இவ்வாறான குறளிவித்தைக்காரர்களின் கூடாரமாக மாறுவதா எனப் பலரும் அங்கலாய்க்கின்றனர்.