காற்பந்தாட்ட உலகில் அபரிதமான சாதனை..பார்சிலோனா அணியில் விளையாட 673 மில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட உலகின் ஒரேயொரு அற்புதமான வீரர்..!!

கால்பந்து உலகில் தலைமுறையின் அதிசிறந்த வீரராக பார்க்கப்படும் அர்ஜெண்டீனாவின் லியோனல் மெஸ்ஸி, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுக்கு பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக 555 மில்லியன் யூரோக்களுக்கு (673 மில்லியன் டொலர்கள்) ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்தவொரு விளையாட்டிலும் ஒரு விளையாட்டு வீரருடன் இதுவரை ஒப்புக் கொள்ளப்பட்ட மிக விலையுயர்ந்த ஒப்பந்தம் இதுவென குறித்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.அந்த செய்தியில் உள்ள தகவல்படி, ஒரு பருவக்காலத்துக்கான மெஸ்சியின் ஊதியம் கிட்டத்தட்ட 138 மில்லியன் யூரோக்கள் (167 மில்லியன் டொலர்கள்) ஆகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட வருவாயுடன் இதர வருவாயும் அடங்கும்.ஆனாலும், ஸ்பெயின் வரி விதிகளின்படி இந்த தொகையில் பாதியை மெஸ்சி வரியாக செலுத்தி இருக்க வேண்டியது இருக்கும்.33 வயதான மெஸ்ஸி, ஏற்கனவே மொத்தத்தில் 510 மில்லியன் யூரோக்களை (619 மில்லியன் டொலர்கள்) பெற்றுள்ளார் என்று அறிக்கை கூறியுள்ளது.கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ள மெஸ்ஸி, அந்த அணிக்காக 30ற்க்கும் அதிகமான சம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார் என்பது இங்கு விசேடமாக சுட்டிக்காட்டப்படவேண்டிய அம்சமாகும்.