அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை நாணயப் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!!

அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்த இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 193.17 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.கடந்த வாரம் 200 ரூபா வரை அமெரிக்க டொலர் விலை அதிகரித்த நிலையில் நேற்றைய தினம் குறைவடைந்துள்ளது.அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 188.63 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.