உலகின் மிகப் பெரிய முருகன் ஆலயத்தில் முதல் முறையாக…வரலாற்றில் எப்போதும் இப்படி நடந்ததில்லையாம்..!!

மலேசியாவில் சிறப்பு மிக்க முருகன் ஆலயமான பத்துமலை திருத்தலத்தில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.பக்தர்கள் கலந்துகொள்ள மலேசிய அரசு அனுமதிக்கவில்லையாயினும் பூஜைகள் அனைத்தும் தொலைக்காட்சி, இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வழக்கமாக பக்தர்கள் புடைசூழ, மேள தாளத்துடன் வெள்ளி ரத ஊர்வலம் கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் நோக்கிச் வெள்ளி ரத ஊர்வலம் செல்லும்.ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய பத்தாயிரம் பேர், இந்த வெள்ளி ரத ஊர்வலத்தில் பங்கேற்பர்.ஆனால், இவ்வாண்டு முதன் முறையாக பக்தர்கள், அர்ச்சனைகள், தண்ணீர் பந்தல்கள் எதுவும் இல்லாமல், அமைதியான முறையில் முழுக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் வெள்ளி ரதம் நேற்று அதிகாலை 3 மணி ஆரம்பித்து காலை ஆறு மணியளவில் பத்துமலைத் திருத்தலம் சென்றடைந்தது.காலை 11 மணி அளவில் கொடியேற்ற உற்சவத்துடன் இவ்வாண்டுக்கான தைப்பூசம் தொடங்கியது. தைப்பூச பூஜைகள் அனைத்தையும், இணையம் வாயிலாக நேரலையாகக் காணும் வாய்ப்பினை பத்துமலைத் திருத்தல நிர்வாகம், பக்தர்களுக்கு வழங்கியிருக்கிறது.இதற்கிடையே, பினாங்கிலும் கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு மத்தியில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.பக்தர்கள் இல்லாமல் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடுவது வரலாற்றிலேயே இது முதன்முறை. பினாங்கிலும் கோயில் பூஜைகள் இணையம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.