தாயின் கண்முன்பாக நெருப்பை பற்ற வைத்த இளைஞனுக்கு நேர்ந்த கதி..யாழ் உரும்பிராயில் சோகம்!!

யாழில் தாயின் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியை சேர்ந்த கோ.கவிதாஸ் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 28 ஆம் திகதி வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதன்போது தீக்காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவரை மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.