நீரில் மூழ்கிப் பலியான மாணவியினால் பாடசாலை ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!

நீரில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை ஆசிரியரை கல்தோட்ட பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த ஆசிரியர் தன்ஜன்தென்ன பாடசாலையின் 16 மாணவர்கள் அடங்கிய குழுவை வெளிப்புற நடவடிக்கைக்காக வளவ ஆற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது 16 வயதுடைய மாணவியொருவர் நீரில் மூழ்கி காணமல்போனதுடன், பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேலும், இந் நிலையிலேயே, சம்பவம் தொடர்பில் கைதான ஆசிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில், அவர் மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைக்காக அழைத்துச் செல்வதற்கு அனுமதி பெறவில்லையென்பது தெரியவந்துள்ளது.எவ்வாறெனினும், ஆசிரியர் இன்றைய தினம் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.