இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி..அனைத்து பூங்காக்களும் இன்று முதல் மீண்டும் திறப்பு..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து தேசிய விலங்கியல் பூங்காக்களும், பொதுமக்கள் பாவனைக்காக சுகாதார வழிகாட்டுதலின் கீழ் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
தெஹிவளை விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல திறந்த மிருகக்காட்சிசாலை என்பன இனிமேல் தினமும் திறந்திருக்கும்.பின்னவல யானைகள் சரணாலயம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மூன்று நாட்களிலும், உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக நான்கு நாட்களிலும் திறக்கப்படும்.ரிடியகம சஃபாரி பூங்காவைப் பார்வையிட விரும்பும் நபர்கள் முன் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.