வைத்தியசாலையில் போதிய வசதிகள் இல்லை..வென்டிலேட்டருடன் வீட்டுக் சென்ற அமைச்சர் பவித்திரா..!!

கொரோனா நோய் தொற்றுகாரணமாக ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, தமக்கு வசதிகள் போதுமானமாக இல்லை எனக் கூறி செயற்கை சுவாசக் கருவி (ventilator) மற்றும் தாதியர்களுடன் வீட்டிற்குச் சென்றுள்ளதாக அவரது ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலையின் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களின் முழு மேற்பார்வையில் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.சுகாதார அமைச்சரைப் பற்றி தவறாக செய்திகள் வெளியிட்ட இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்கனவே தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, சுகாதார அமைச்சர் தனது உயிருக்கு ஆபத்தை பொருட்படுத்தாமல், சுகாதாரத் துறையையும், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளையும் வலுப்படுத்த அயராது உழைத்தார் எனவும் இவர் தெரிவித்துள்ளார்.

விராஜ் அபேசிங்க (ஊடக செயலாளர்)